சென்னை;மே.23-
சென்னையில் முககவசம் அணியாமல் பைக் மற்றும் காரில் பயணித்தால் ரூ.500 அபராதமாக வசூலிக்கப்படும் என்று சென்னை காவல் துறை அறிவித்துள்ளது.தமிழகத்தில் கொரோனா வைரஸ் தீவிரம் காரணமாக நாளுக்கு நாள் பாதிப்பு அதிகரித்துக் கொண்டே செல்கிறது. .கொரோனாவில் இருந்து தற்காத்து கொள்ள முகக்கவசம் அணிவது மற்றும் அடிக்கடி கைகளை சுத்தம் செய்வது போன்றவைகளை பின்பற்ற வேண்டும் என்று உலக நாடுகள் அனைத்தும் வலியுறுத்தி வருகிறது. இந்தியா மட்டுமின்றி தமிழகத்திலும் இதனை கடைபிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. அந்தவகையில், முதல் சென்னையில் முககவசம் அணியாமல் பைக் மற்றும் காரில் பயணித்தால் ரூ.500 அபராதமாக வசூலிக்கப்படும் என்று சென்னை காவல் துறை அறிவித்துள்ளது. வாகன ஓட்டிகள் முககவசம் அணியாமல் வந்தால் ரூ. 500, நடந்து வந்தால் ரூ.100 அபராதம் வசூலிக்கப்படும் என ஆணையர் ஏ.கே விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.தமிழகம் முழுவதும் ஊரடங்கில் தளர்வு ஏற்பட்ட பின்னர் சென்னையில் பொதுமக்கள் பலர் வாகனங்களிலும், சாலைகளில் வெளியே சுற்றுவதை தொடங்கியுள்ளனர். குறிப்பாக வாகன ஓட்டிகள் பலர் இருசக்கர வாகனங்களில் முககவசம் அணியாமலும் பலர் சுற்றி திரிந்து வருகின்றனர்.ஏற்கெனவே சென்னை மாநகராட்சி ஆணையர் உத்தரவின் படி முககவசம் அணியாமல் சாலைகளில் இரு சக்கர வாகனத்தில் செல்வோரிடம் 100 ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டு வந்தது.இந்த நிலையில் சென்னையில் இருசக்கர வாகனங்களில் செல்வோர் முககவசம் அணியாமல் வந்தால் ரூபாய் 500, நடந்து சென்றால் ரூபாய் 100 அபராதம் வசூலிக்கப்படும் என சென்னை காவல்துறை ஆணையர் ஏ.கே விஸ்வநாதன் தெரிவித்துள்ளார். போக்குவரத்து காவலர்கள் செய்யும் வாகனத் தணிக்கை செய்வதை ஆய்வு செய்வதற்காக இன்று காலை ஸ்பென்சர் பிளாசா சிக்னலில் சென்னை காவல்துறை ஆணையர் ஏ கே விஸ்வநாதன் வந்திருந்தார். அப்போது அவர் இந்த அபராதத் தொகை பற்றிய உத்தரவை செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர் பொதுமக்கள் தேவையின்றி வெளியே வரக் கூடாது எனவும் தேவையில்லாமல் வெளியே வருவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார் இருசக்கர வாகனத்தில் முக கவசம் அணியாமல் வந்தால் ரூபாய் 500, நடந்து வந்தால் ரூபாய் 100 அபராதமாக இன்று முதல் வசூலிக்கப்படும் என அவர் தெரிவித்தார்.மேலும் கொரோனா பாதுகாப்பு பணியில் போலீஸார் தீவிரமாக பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு தர வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்தார்.
முககவசம் அணியாமல் பைக் மற்றும் காரில் பயணித்தால் ரூ.500 அபராதமாக வசூலிக்கப்படும்