ஈரோடு;டிச,01-
ஈரோட்டில் தமிழ்நாடு கல்வித்துறை நிர்வாக அலுவலர்கள் சங்கம் சார்பில் பள்ளி கல்வித்துறை அமைச்சுப் பணியாளர்களுக்கு உரிய காலத்தில் ஊதியம் பெற்று வழங்க நடவடிக்கை எடுக்காத பள்ளிக்கல்வித்துறை ஆணையரின் போக்கை கண்டித்தும், உடனடியாக ஊழியர்களுக்கு ஊதியம்பெற்று வழங்க புதிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தியும் ஈரோடு முதன்மை கல்வி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இந்த ஆர்பாட்டத்தில் 101 அரசாணை ரத்து செய்யப்பட்டு மேற்கொள்ளப்பட்ட நிர்வாக சீரமைப்பினால் பணி மாறுதல் பதவி உயர்வு கலந்தாய்வில் கலந்து கொண்டு பணியிட மாறுதல் பெற்ற பணியாளர்களுக்கு அக்டோபர் நவம்பர் மாத ஊதியம் பெற்று வழங்கப்படவில்லை இது அமைச்சுப் பணியாளர்களை பெரும் அவதிக்குள்ளாக்கியுள்ளது என்று முழக்கமிட்டு கண்டண ஆர்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட தலைவர் அண்ணாதுரை, நந்தகுமார், குமரேசன் ரமேஷ், கோவிந்தராஜு, கல்யாணசுந்தரம், ஜோதி மனவாளன், ராஜேந்திரன், மாநிலத் துணைத் தலைவர் ராஜேஷ் மாவட்டச் செயலாளர் பழனிவேல், மாநிலச் செயலாளர் விஜய மனோகரன், மாவட்ட பொருளாளர் புகழேந்தி உள்ளிட்ட சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்